Show all

பாக்கிஸ்தானில் தேறிய சல்மான்கான்

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பஜ்ரங்கி பாய்ஜான் சல்மான் ரசிகர்களை கவர்ந்த்து இயல்புதான் அதற்கு மேலே பாகிஸ்தானில் தேர்வாகியிருப்பதே செய்தி. பாகிஸ்தானிலிருந்து ஒரு குழந்தையை காப்பாற்றி இந்தியாவில் இருக்கும் அவளது பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பதே 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படக் கதையின் மையக்கரு.

பாகிஸ்தானின் சிந்து சென்சார் போர்ட் அதிகாரி செய்த டுவீட்டில், 'வெகு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானை நல்ல விதத்தில் காண்பித்திருக்கிற திரைப்படம் இது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த திரைப்படம் பாகிஸ்தான் சென்சார் போர்டில் தேறியதற்கு சல்மான் கான் நன்றி தெரிவித்திருந்தார். 

மேலும், 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படம் குழந்தைகளின் மீது பாசம் காண்பிக்க வேண்டியதை குறித்த படம், எனவே எவ்வித கட்டுபாடுகளும் இன்றி அனைவரும் இதை பார்க்க வேண்டும்' என்று சல்மான் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த திரைப்படத்தின் சில காட்சிகளும், சில வசனங்களும் சிந்து சென்சார் போர்டால் வெட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.