Show all

200 ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா

பாதுகாப்புத் துறையில் இந்தி யாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நல்லுறவு நீடிக்கிறது. இப்போது ‘இந்தி யாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தில் ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், தயாரிப்பு உரிமம் ஆகியவற்றையும் ரஷ்யா வழங்குகிறது. இது இந்திய பாதுகாப்புத் துறையை மேலும் வலுவடையச் செய்யும்.இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களில் சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்து வருகிறோம். இனி வரும் காலத்திலும் இந்த உறவு தொடரும். மேலும் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல்கட்ட வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் விரைவில் செயல்வடிவம் பெறும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இணைய ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக பாது காப்புத் துறை சார்ந்த நிறு வனங்கள் இந்தியாவோடு இணைந்து போர் விமானங்களை தயாரிக்க முன்வந்துள்ளன. இவை தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.