Show all

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்கிறது

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்க உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் தாதுக்களைக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் பூமியை கடக்கும் காட்சி வடமேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கேனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லூ மையத்திலிருந்து இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்லூ வானியலாளர் பாப் பெர்மன், விண்கல் பூமியைக் கடப்பதை கண்களால் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம் என்றாலும், UW-158 விண்கல் கடக்கும் போது ஸ்லூ மையத்தில் உள்ள தொலைநோக்கிகள், விண்கல் கடக்கும் காட்சியை 30 மடங்கு பெரிதாகக் காட்டும் எனத் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.