Show all

இந்தியாவில் யுரேனியத்தை உற்பத்தியில் வளர்ச்சி கையிருப்பில் வைக்க திட்டம்

இந்தியாவில் யுரேனியம் உற்பத்தி இந்த ஆண்டு சாதனை அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் 1,252 டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அணுஉலைகளுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் யுரேனியத்தை விட இரு மடங்கு ஆகும்.இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் அணுஉலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாத அளவில் தற்போது நமது நாட்டில் யுரேனியம் கையிருப்பு உள்ளது. நம்மிடம் 5 ஆயிரம் டன் முதல் 15 ஆயிரம் டன் வரை யுரேனியம் இருக்கக் கூடும். இது 5 முதல் 10 ஆண்டுகள் அணுஉலைகளுக்கு போதுமானது ஆகும்.

அண்மையில் கஜகஸ்தான் நாட்டில் இருந்து 5 ஆயிரம் டன் யுரேனியம் பெறுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடியால் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரஷியா, உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் யுரேனியம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.எனவே 5 ஆயிரம் டன் யுரேனியத்தை சேமித்து வைக்க மத்திய அரசின் ஒப்புதலை கேட்டு இருக்கிறோம். ஏற்கனவே யுரேனியத்தை சேமிக்க ஐதராபாத்தில் அணுஎரிபொருள் வளாகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் இன்னொரு அணு எரிபொருள் சேமிப்பு வளாகம் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.