Show all

ஐ ஐ டி கல்லூரி நிர்வாகத்தின் மீது RSS கண்டனம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு கல்வி சார்ந்து கொண்டு வரும் சட்ட திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்கட்சிகளின் அரசியல் தலையீடே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் கொள்கை திணிப்பு முன்னணி கல்வி நிறுவனங்களில் இருப்பதாகவும், பேராசிரியர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்றும் ஆர் எஸ் எஸ் விமர்சித்துள்ளது. மேலும் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது புனித நகரான ஹரித்துவார் அருகில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி.யில் அசைவ உணவுகளை வழங்க ஆரம்பித்தது, ரூர்கேலா என்.ஐ.டி மாணவர்கள் கம்யூனிட்டி ஹாலில் பூஜை செய்ய தடைவித்திதது போன்றவை இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.