Show all

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் விமான சேவை ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து வருகின்றனர்.

அங்குள்ள ருவாங் விமான நிலையம் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான பாலி விமான நிலையமும் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயா விமான நிலையமும் மூடப்பட்டிருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.