Show all

நடிப்பை அல்ல நிஜத்தைப்பாருங்கள் என்கிறார் தனுஷ்

அதனை நடிப்பில் நேற்று மாரி படம் திரைக்கு வந்தது, படம் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படத்தில் அதிகமாக புகைப்பிடிப்பது போல் காட்சிகள் உள்ளன, இதை பலரும் பல இடங்களில் எதிர்த்து வருகின்றனர்.இதற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த தனுஷ் ‘நான் ஒரு நடிகன் அந்த கதாபாத்திரத்திற்காக தான் நடிக்க வேண்டும், இயக்குனரிடம் சென்று நான் இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறமுடியது.

என் படத்தை பார்த்து என்னை ரோல் மாடாலாக எடுத்து கொள்ளவேண்டாம், என்னுடைய ரியல் லைபில் நான் சிகரெட்டை தொட்டது கூட இல்லை, என் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.