Show all

பழநி சந்தையில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் தக்காளி விலை சரிவு

கேரள வியாபாரிகள் வருகை குறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக பழநி சந்தையில் தக்காளி விலை ஒருவாரத்தில் பெட்டிக்கு ரூ.150 வரை விலை குறைந்துள்ளது.திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஏராளமான தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவை ஒட்டன்சத்திரம், பழநி தக்காளி மார்க்கெட் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மழை பெய்ததால், தக்காளி மகசூல் உள்ளது.

ரம்ஜான் பண்டிகை காரணமாக கடந்த சில தினங்களாக கேரள வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளதால் அவை மார்க்கெட்டில் தேங்கின. கடந்த 4 நாட்களுக்கு முன் ஒருபெட்டி (15 கிலோ) ரூ.330 முதல் ரூ.370 வரை விற்றது. நேற்று ரூ.140 முதல் ரூ.180 ஆக குறைந்தது. தக்காளிவரத்து இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.