Show all

இன்டர்நெட் இலவச கால்களுக்கு தடை விதிப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் (TRAI) அமைப்பிடன் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சனை, பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.

இணைய வழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.இத்தகைய கட்டுப்பாடுகளால் இணையதளப் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை மத்திய அரசு உறுதி படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.