Show all

நில கையக மசோதா விவசாயிகளுக்கு பலன் அதிகம் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வருகிற 21–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தற்போது இந்த மசோதா 30 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் இருக்கிறது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக சமீபத்தில் பிரதமர் மோடி மாநில முதல்–மந்திரிகள் அங்கம் வகிக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் கிராமப்புற அபிவிருத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த கூட்டத்தை காங்கிரஸ் முதல்–மந்திரிகள் புறக்கணித்தனர்.இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த நிலம் தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் எங்கு போய் நாம் வளர்ச்சியை ஏற்படுத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.