Show all

காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது - பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யாததால் கோர்ட்டு அவரை விடுவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் ரஷியாவில் உள்ள உபா நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப்பிடம் மோடி கேட்டுக் கொண்டார்.

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் சகோதரர்களுக்கு அரசியல் மற்றும் தார்மீக ரீதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். எனவே காஷ்மீர் பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.