Show all

2–வது ஆட்டத்திலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியை இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது.ஹராரே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரஹானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.

நிதானமாக விளையாடிய கேப்டன் ரஹானே 83 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தும், முரளி விஜய் 72 ரன்கள் எடுத்தும், ராயுடு 41 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார். ஆட்டத்தின் 49 ஒவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.