Show all

காமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அறிக்கைக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜரின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரசுக்கோ, அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கோ தகுதி இல்லை. காமராஜர் எந்தக் காங்கிரஸின் தலைவராக இருந்தாரோ, அக்கட்சியை இரண்டாக்கி, தனது சுயநலத்துக்காக கட்சியில் தனது பெயரையும் சேர்த்தார் இந்திராகாந்தி. நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்தார்.

நாட்டுக்காக உழைத்த சர்தார் படேல் மற்றும் காமராஜர், கக்கன் போன்றோரை போற்றுவதை பாஜகவினர் கடமையாகவே கருதுகின்றனர்.தமிழகத் தேர்தலுக்கு காலமிருக்கிறது. ஆனாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து இப்போது பேசப்படுகிறது.

நெருக்கடிநிலை காலத்தில் காமராஜரைக் கைது செய்ய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டதாகவும், மாநிலத்தில் அப்போது திமுக ஆட்சியிருந்ததால் காமராஜரைக் கைது செய்யவில்லை என்றும் திமுக தலைவர்களே பேசியுள்ளனர். பின்னர் அவர்களே காங்கிரசுடன் கூட்டணி அமைத்தனர்.

எனவே கொள்கை,லட்சியம் ஏதும் இல்லாத காங்கிரசும்,தி.மு.க-வும் தான் இதை பற்றி பேச கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.