Show all

மதுக்கடை உரிமையாளர்களுக்காக ஆஜராவதா? அட்டர்னி ஜெனரலுக்கு கண்டனம் கேரள முதல்வர்

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் தெரிவித்தார்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உம்மன் சாண்டி கடிதம் எழுதவிருப்பதாகவும், அதில் இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது மதுக் கூட உரிமையாளர்களுக்காக முகுல் ரோத்தகி ஆஜராகாமல் இருப்பதை உறுதிப்படுத்த உம்மன் சாண்டி வலியுறுத்துவார் என்றும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.