Show all

துர்க்மீனிஸ்தானுடன் இந்தியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியா - துர்க்மீனிஸ்தான் இடையே பாதுகாப்பு, ரசாயனப் பொருள்கள் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு, இரு நாடுகள் சார்பாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், டி.ஏ.பி.ஐ. திட்டமானது, இந்தியா - துர்க்மீனிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத் தூண் ஆகும். பிராந்திய அளவில் முக்கியத் திட்டமான இதை விரைந்து செயல்படுத்த தலைவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்க்மீனிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.