Show all

புயலால் பயமுரும் சீனா

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவானதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசு தீவிரமாக இறங்கிஉள்ளது.சமீபநாட்களாக தெற்கு சீன கடலில் புயல்கள் தாக்கம் அதிகரித்து உள்ளது. சீனாவின் தெற்கு பிராந்தியமான குயங்டோங்காவில் 'லிம்பா' என்ற புயல் தாக்குவதுடன் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.இந்த பிராந்தியத்தின் 15 கவுண்டிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

மற்றொரு பயங்கர புயலான 'சான் - ஹோம்' பூஜியான் மற்றும் ஜேலியாங் மாகாண கரைகளை இன்று கடக்கும்.இதன் காரணமாக சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் தெற்கு மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.