Show all

அரசியில் கலப்படம் குறித்து டெல்லி ஐகோர்ட்யில் வழக்கு

இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில் அவர் உலக மயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன. ஆனால் தர பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அசல் அரிசியுடன் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது. இதை சாப்பிடுகிறபோது, மிக மோசமான இரைப்பை நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே அரிசி, பருப்பு, பழ மொத்த வியாபார மண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.