Show all

ரூ94கோடியை விழுங்கியது தூய்மைஇந்தியா திட்டம்

நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட வினாவிற்கு மையஅரசின்குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தந்துள்ள செலவுப் பட்டியல்.

விளம்பரம்மற்றும் கருத்துப்பரப்புதல் வகைச்செலவு 2.15கோடி.அச்சு ஊடக விளம்பர வகைகளுக்கான செலவு 7.08கோடி.ஒலிமற்றும் காட்சித் தொடர்பான விளம்பர வகைக்கான செலவுகள் 43.64கோடிகள் தொலைக் காட்சிகளில் விளம்பரம் மேற்கொள்ள செலவுகள் 25.88கோடிகள்.

தூர்தர்சன் விளம்பரங்களுக்குச் செலவுகள் 16.99கோடிகள்.வானொலிக்குச் செலவுகள் 5.42கோடிகள். ஐந்து ஆண்டுகளில் நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு இரண்டு லட்சம் கோடியும் செலவிட உத்தேசம் என்று மையஅரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.