Show all

கால்சீட் தர மறுக்கும் அஞ்சலி கடுப்பில் தயாரிப்பாளர்

நீண்ட நாளுக்கு பிறகு அஞ்சலிக்கு தமிழில் அப்பாடக்கர் படம் ரீஎன்ட்ரி கொடுத்தது இதனையடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் படம் இம்மாதமே திரைக்கு வரவிருந்த நிலையில் தாமதம் குறித்து விசாரித்தபோது அனைவரும் அஞ்சலியை கைகாட்டுகின்றனர் காரணம் கால்சீட் தருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

அஞ்சலியிடம் கேட்டால், 50 நாள் கால்ஷீட் தந்தேன். அதை வீணாக்கிவிட்டார்கள். இப்போது வேறு படங்களுக்கு கால்ஷீட் தந்திருக்கிறேன். இதில் என் தப்பு எதுவும் இல்லை என்கிறார்.இது விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.