Show all

சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது

சாதி வாரிக் கணக்கெடுப்பை மைய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த இரண்டு நாட்களாக ராமதாசு அவர்களும் கருணாநிதி அவர்களும் முன்வைத்தனர்.அவர்களைத் தொடர்ந்து வடமாநிலங்களிலும் இந்தக்கோரிக்கை வலுக்கிறது. தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் என்று பலரும் பல்வேறு புள்ளி விவரங்களைத் தந்து கொண்டிருக்கிற நிலையில் மைய அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பை வெளியிடுமானால் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் லல்லுபிரசாத்யாதவ்.

1931ல் தான் சாதிவாரிகணக்கெடுப்பு வெளியிடப்பட்டது அதற்குப்பிறகு பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதியக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்டும் மைய அரசு சாதியக்கணக்கெடுப்பை வெளியடத் தயங்குவது ஏன்? என்கிறார். பீகார்முதல்வர்நிதிஷ்குமார்.சாதியக்கணக்கெடுப்பை மைய அரசு பொதுவில் வெளியிட்டால் தாம் நாட்டில் பின் தங்கியவர் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் பீகார் முன்னால் முதல்வர் ஜிதன்ராம்மஞ்சி.

சாதிவாரிக்கணக்கெடுப்பில் இருந்து இந்தியாவில் 92 விழுக்காட்டினர் 10000க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் என்று தெரிகிறது சாதியக்கணக்கெடுப்பை முழுமையாக பொதுவில் வெளியிடப்படும் போதுதான் உண்மை நிலவரத்திற்கேற்ப நாட்டின் முன்னேற்றத்திற்கு திட்டமிட முடியும் என்கிறார் மார்க்சியகம் யுனிசத் தலைவர் சீதாராம் யெச்சூரி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.