Show all

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள், அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களது சிறைக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.ஜூலை 17 ஆம் தேதி வரை இவர்களுக்கு காவலை நீட்டித்தும், மாற்று சிறையில் காவலில் வைக்கவும் நீதிபதி கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் 14 மீனவர்களையும் போலீஸார் வவுனியா சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அடைத்தனர்.தொடர்ந்து காவலை நீட்டித்து 36 நாள்களாக சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் 14 மீனவர்களும் திங்கள்கிழமை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ராமேசுவரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.