Show all

தமிழை மத்திய அரசு அலுவல் மொழியாக்க கோரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலம், தொலைபேசி இணைப்பகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில், தமிழகத்தின் ஆட்சி மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இச்செயல், தமிழக மக்களையும், தமிழையும் அவமதிக்கும் செயல்.

மத்திய அரசின் அலுவல் மொழிச் சட்டப்படி மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே அலுவலர் மொழியாக இருக்க வேண்டும். ஆனால், இந்த சட்டம் தமிழகத்துக்கு பொருந்தாது, என்று இந்த சட்டத்தின் முகப்பிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழை மட்டும் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி, வரும், 10ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதே போல் திருச்சி தலைமை அஞ்சலகத்திலும், தர்மபுரி தொலைபேசி இணைப்பகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.