Show all

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீஸாரால் கொளுத்தப்பட்ட பெண் சாவு

தனது கணவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை, உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி அருகே போலீஸார் தீவைத்துக் கொளுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பாராபங்கி மாவட்டம், கஹா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக, ராம் நாராயண் என்பவரை கோத்தி காவல்நிலைய போலீஸார் விசாரணைக்கு கடந்த சனிக்கிழமை அழைத்துச் சென்றனர். இவர் உள்ளூர் ஹிந்தி நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் சந்தோஷ் என்பவரின் தந்தையாவார்.

ராம் நாராயண் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி நீத்து காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸாரிடம் விசாரித்தார். அப்போது, ராம் நாராயணை விடுவிக்க போலீஸார் ஒரு லட்சம் ரூபாய் லட்சம் கேட்டனராம். அதற்கு மறுப்புத் தெரிவித்த நீத்துவை காவல் நிலைய வாயிலிலேயே போலீஸார் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயமடைந்த நீத்து மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். முன்னதாக, அவரிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரிடம், போலீஸார் தன்னைக் கொளுத்தியதாக அவர் மரண வாக்குமூலம் அளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.