Show all

சட்ட மேலவைத் தேர்தல் தெலுங்கு தேசம் வெற்றி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிரகாசம் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இத்தேர்தலில், தெலங்கு தேசம் கட்சி உறுப்பினர் முகுந்த ஸ்ரீநிவாசுலு ரெட்டி 724 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அட்லா சின்ன வெங்கட ரெட்டிக்கு 13 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 17 வாக்குகள் செல்லாத வாக்குகளாகும் என்று தேர்தல் அதிகாரி ஹரி ஜவாஹர்லால் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.