Show all

ஜம்மு காஸ்மீரில் பாஜக அமைச்சர் பெண் மருத்துவரின் காலரை இழுத்தார்

ஜம்மு-காஷ்மீரில் பெண் மருத்துவர் ஒருவரின் காலரை பா.ஜ அமைச்சர் பிடித்து இழுப்பது போன்ற படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான பிடிபி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்றது வருகிறது. இவரது அவையில் பாஜவை சேர்ந்த சவுத்ரி லால் சிங் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்.

தற்போது காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. இதையொட்டி யாத்ரீகர்களுக்கான மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் லகன்பூரில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் சவுத்ரி லால் சிங் சென்றார்.

அப்போது அவர் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் சென்று ‘உங்களது காலர் சரியாக இல்லை பாருங்கள்’, என்று கூறி அதனை சரி செய்வது போல அவரது காலரை பிடித்து இழுத்துள்ளார். இந்த புகைப்படம் அனைத்து இணைய தளங்களிலும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.