Show all

குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும் - சிவசேனா

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று கூறப்பட்டிருப்பதாவது
2001–2011 வரை நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் ஆக உயர்ந்தது. பின்னர், 2015–ம் ஆண்டில், இதுவரை இந்த எண்ணிக்கை மேலும் 5–10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மொழி, பூகோள பிரச்சினை மற்றும் உணர்வுபூர்வமான ஏற்றத்தாழ்வுகளை மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமையிலும் பிளவை ஏற்படுத்தும். ஆகையால், முஸ்லிம்கள் நில மசோதா மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர வேண்டும். இதை அவர்களிடம் பிரதமர் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

நள்ளிரவில் தன்னுடைய வீட்டின் கதவை தட்டினாலும், உங்களது பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று பிரதமர் உறுதியளித்தார். இதேபோல், முஸ்லிம்களும் நாட்டுக்கு உதவுவார்களா? நிலம் கையகப்படுத்தும் மசோதாவை விட, பொது சிவில் சட்டம் நாட்டுக்கு கட்டாயம் தேவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.