Show all

இறந்தவர்களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது

உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்யும் புதிய உத்தியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் பெண் பயிற்சி எஸ்.ஐ. மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். வியாபம் மோசடியில் தொடர்புடைய பலர் தொடர்ந்து மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்து மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது: டாக்டர் சர்மா மிகவும் நல்ல மனிதர். அவருடைய மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குடும்ப பிரச்னையில்தான், பயிற்சி பெண் எஸ்.ஐ. தற்கொலை செய்துள்ளார். ஆனால் வியாபம் மோசடி வழக்குக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல வீண் பிரசாரம் செய்து, அவர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நியாயமில்லை. உயிரிழந்தவர்களுக்கு தற்போது ஆறுதல் தேவை. அவர்களுக்கு எங்கள் அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.