Show all

பா.ஜ.க பெண் அமைச்சர்கள் நால்வர் பதவி விலக கோரி எதிர் கட்சிகள் போராட்டம்

முறைகேடுகளில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அந்த நால்வர்.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய லலித்மோடி லண்டனிலிருந்து போர்ச்சுகல் செல்வதற்கு உதவியதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ்- ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய லலித்மோடி இங்கிலாந்தில் தங்குவதற்கு அனுமதி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே- தனது கல்வித்தகுதி குறித்து தவறான தகவல் தந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி- டெண்டர் விடாமல் ஒரேநாளில் அனுமதி வழங்கிய 206 கோடி கொள்முதல் சர்ச்சை மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் பதவிவிலக வேண்டி காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.