Show all

நிலவில் கால் பதித்து நடந்த விண்வெளி வீரர் மரணம் அடைந்தார்

நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெ ரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 5-ந் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் ஆலன் ஷெப்பேர்டு என்ற விண் வெளி வீரருடன் சென்று நிலவில் கால் பதித்தார். அத்துடன் நிலவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு.

94 பவுண்ட் எடை கொண்ட சந்திர மண்டல பாறைகள், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து, அவற்றை ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் 184 விஞ்ஞானிகள் குழுக்களுக்கும், 14 பிற நாடுகளுக்கும் வழங்கியதில் எட்கர் மிட்செல்லுக்கு முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவிலும், அமெரிக்க கடற்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர்.

 

நிலவில் கால் பதித்து நடந்ததின் 45-வது ஆண்டு விழாவை கடந்த 5-ந் தேதி கொண்டாடவிருந்த நிலையில், 4-ந் தேதி மாலை புளோரிடாவில் மரணம் அடைந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.