Show all

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதற்காக

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் மருந்துகள் உள்பட 74-க்கும் மேற்பட்ட மருந்துகளின் இறக்குமதிக்கான வரி விலக்கை நடுவண் அரசு ரத்து செய்துள்ளது. இதனால், அந்த மருந்துகளின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக நடுவண் கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிவிக்கையில், 74 மருந்துகளின் இறக்குமதிக்கான வரி விலக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுநீரகக் கல், புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு, எலும்பு நோய்கள் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு இனி இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், அந்த மருந்துகளின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதேபோல், எய்ட்ஸ், கிருமி தொற்றுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு சில மருந்துகளுக்கான இறக்குமதி வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களின் நலன்களை காக்கும் விதமாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும் மேற்கண்ட நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.