Show all

கவின் லாஸ்லியா காதலைக் கொண்டாடும் இளசுகள்! கீச்சுவில் தலைப்பானது

பெரியவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது, போட்டிக்கு வந்த இடத்தில் காதல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று லாஸ்லியா கவின் மீது கோபம் கொப்பளித்தாலும், பிக்பாஸ் தலைப்பை வெல்லாத லாஸ்லியா கவினை கீச்சுவில் தலைப்பாக்கி கொண்டாடி வருகின்றனர் இளசுகள்.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என்ன லாஸ்லியா பிக்பாஸ் தலைப்பை வென்றிட வில்லையா? இருக்கட்டுமே.. பிக்பாஸ் தலைப்பை தராவிட்டாலும் எங்கள் மனதை வென்றவர் லாஸ்லியாவும், கவினும் என்று இளசுகள் களத்தில் குதித்துள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்கள் வேறுபாட்டில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அளவில் இதனையெல்லாம் பின் தள்ளிவிட்டு கீச்சுவில், லாஸ்லியா கவின் குறித்த இளசுகளின் கதைப்புகள் தாம் கீச்சுவில் தலைப்பாகியிருக்கிறது.

கவினும் லாஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட அன்பை சில கீச்சுகள் சிலாகிக்கின்றன.

லாஸ்லியா என்பது ஒரு சொல் அல்ல, அது ஒரு உணர்ச்சி என்று லாஸ்லியாவை கொண்டாடுகிறது ஒரு கீச்சு.

பிக்பாஸ் வீட்டில் படப்பிடிப்பு கருவி முன் நடிக்காதவர்கள் கவினும், லாஸ்லியாவும்தான் என்கிறது ஒரு கீச்சு. அவர்கள் போலியாக ஒரு போதும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு உண்மையாக இருந்தார்கள் என்கிறது அந்தக் கீச்சு.

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியா தந்தை அவரை கண்டித்த போது, லாஸ்லியாவுக்கு எதிர்ப்பு வந்தது. அதே நேரம், லாஸ்லியா, கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள் என அவருக்கு ஆதரவாகவும் கருத்து பதிந்திருந்தனர்.

இப்பிக்பாஸில் அதிகமுறை தலைப்பான ஒருவர் உண்டெங்கில் அது கவிந்தான் சாரே என்று ஒரு கீச்சு.

இந்த வாரம் வெளியேற்றிவிடுவார்கள். அடுத்த வாரம் வெளியேற்றிவிடுவார்கள் என பலர் முணுமுணுக்க, ‘எனக்கு வெளியேற்ற அட்டை நானே போட்டுக்கொண்டால்தான் உண்டு’ என்று அவரேதான் வெளியேறினாரே தவிர கவினை பிக்பாஸ் வீட்டில் உள்ள யாராலும் வெளியேற்ற முடியவில்லை. இப்படியெல்லாம் ஒரு இலட்சத்தைத் தாண்டி லாஸ்லியா கவினைக் கொண்டாடும் கீச்சுகள் இணையத்தில் உலா வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,298.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.