Show all

நடப்பு அசத்தல் அதிதகதைத்தலைவி பாத்திரம் பேட்வுமனாக ரூபி ரோஸ்! அதிதகதைத்தலைவர் பாத்திரங்களுக்கு மேற்குலகில் நல்ல வரவேற்பு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய சின்னத் திரையில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் அதிதகதைத்தலைவி  பாத்திரமான பேட்வுமன் என்ற தொலைக்காட்சி தொடரின் விளம்பரக் காணொளி வெளியாகி உள்ளது.

மேற்கத்திய திரையுலகில் விகடக் கதைப் புத்தகங்களில் இருக்கும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான அதிதகதைத்தலைவர் கதாபாத்திரப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் 'பேட்மேன்' என்ற அதிதக்கதைத்தலைவன் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த கற்பனையான கதாபாத்திரத்தை வைத்து ஏராளமான படங்களும் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

'பேட்மேனைத் தொடர்ந்து தற்போது 'பேட்உமன்' என அதிதகதைத்தலைவி கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை படமாக இல்லாமல் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பவுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பான முதல் விளம்பரக் காணொளி மேற்கத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்உமெனாக மேற்கத்திய நடிகை ரூபி ரோஸ் நடித்துள்ளார். இந்த விளம்பரக் காணொளி மேற்குலக நாடுகளின் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.