Show all

மருந்து சொல்லும் சேரன்! வஞ்சப்புகழ்ச்சி அணியில் பார்த்திபன் கிறுக்குக்கு

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை பார்த்த சேரன் ‘பார்த்திபனின் பித்தம் தெளிய மருந்து கொடுக்க வேண்டும்’ என தனது கீச்சுவில் வஞ்சப் புகழ்ச்சி அணி புகழாரம். 

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் தாமதமாக, இயக்குனர் பார்த்திபன் தயாரித்து, நடித்து, இயக்கி வெளியான படம் ‘ஒத்த செருப்பு’ படத்தை தற்போது பார்த்துள்ளார்.

சேரன், பார்த்திபன் பாணியிலேயே வஞ்சமாய் புகழ்ந்து கீச்சுப் பதிவு இட்டிருக்கிறார். அதில் அவர் “நீங்கள் ஒற்றை ஆளாய் கிறுக்கிய கவிதை, நீங்கள் இன்னும் திரைப்படக் கிறுக்கனாக இருக்கிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறது. இந்த பித்தம் தெளிய உங்களுக்கு கீழ்கண்ட மருந்துகள் தேவை. 1. சிறந்த இயக்குனருக்கான இந்திய விருது, 2. சிறந்த நடிகருக்கான இந்திய விருது , 3. காந்தி படம் போட்ட பொன்-தாள்கள் 1000 மூட்டைகள். இதெல்லாம் இவருக்கு கொடுத்தால் அவரது நோய் பலமடங்காகி இன்னும் அதிகமாக கிறுக்குவார்” என புகழ்ந்துள்ளார்.

அந்தக் கீச்சுக்குப் பதிலளித்த பார்த்திபன் “உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது! நன்றி!” என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.