Show all

செல்பேசியைத் தட்டிவிட வேண்டிய தவறு, ஏன் நிகழ்ந்தது! சிவகுமார் விளக்கம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தம்படம் எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, உதகை தொட்டபெட்டா போய் அதை உங்களுக்கு பின்னால் நிறுத்தி எடுக்கும் விவகாரம். அது தன்னுரிமை சார்ந்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் ஒரு 200, 300 பேர் கலந்துக்கொள்ளும் விழாவுக்கு போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போகும் முன்னாடி பாதுகாப்புக்கு செல்லும் ஆட்களைக்கூட ஓரந்தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்பேசியைக் கையில் வைத்துக் கொண்டு தம்படம் எடுக்கிறேன் ஐயா, என்று நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்.

உங்களைப் படம் எடுக்கிறேன் ஐயா என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டீர்களா? ஊரறிந்தவராக வளர்ந்தவன் என்பவன் நாம சொன்னபடி, இனிப்புக்கட்டி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர் பார்ப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம்பேருடன் விமானத்தளத்திலும். திருமண விழாக்களிலும் செல்பேசிக்கு நின்றிருக்கிறேன் உங்களுக்கு தெரியுமா?

நான் பெரிய சான்றோன் என்று சொல்லிக்க வில்லை, நானும் மனிதன் எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றனும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருத்தரும் அவர்கள் வாழ்க்கையில் கதைத் தலைவர்கள்தாம். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப்பார்க்க வேண்டும். இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,955.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.