Show all

தமிழிசை மீது விசுவுக்கு என்ன கோபம்!

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் கடந்த மூன்;று ஆண்டுகளாக பாஜக கட்சியைச் சேர்ந்தவன்தான. ஆனால் தமிழிசைக்கு மட்டும் ஆதரவாக கருத்துப் பரப்புதல் செய்யவே மாட்டேன் என்கிறார் அரட்டைஅரங்கம் புகழ் திரைப்பட இயக்குநர் விசு.

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அனைத்துக் கட்சிகளும் கருத்துப்பரப்புதலுக்குத் தயாராகிவிட்டன. குறிப்பிட்ட கட்சியின் மீது அபிமானம் உள்ள திரையுலக பிரபலங்களும் கருத்துப்பரப்புதல் பயணத்தை தொடங்கி விட்டார்கள். இந்தச் சூழலில் இயக்குநரும் நடிகருமான விசு, 'நான் பாஜகவில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை ஒருமுறைகூட கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசையைச் சந்திக்க முடியவில்லை. இந்தச் சூழலில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு என்னை அழைத்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ நான் ஒரு பிரபலமாக இருக்கிறேன். என்னாலேயே தமிழிசையைச் சந்திக்க முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அவரை சந்திக்க முடியும். எந்த நம்பிக்கையில் அவரை ஆதரித்து என்னால கருத்துப்பரப்புதல் செய்ய இயலும்.' என்று தமிழிசை மீதான நம்பிக்கையின்மையைப் பொது வெளியிலேயே பதிவு செய்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,099.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.