Show all

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும்: ஒபாமா

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்த நாட்டில் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நேற்று பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது

 ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதால் பிரிட்டனின் செல்வாக்கு வலுவிழக்காது.

 மாறாக, ஐரோப்பிய யூனியன் மூலம் அதன் செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கவே செய்யும்.

 ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பலத்தைப் பயன்படுத்தி, உளவுத் தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் தனது பங்களிப்பை பிரிட்டன் தொடர்ந்து வழங்க வேண்டும்.

 ஐரோப்பிய யூனியனின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்பதையும், பிற நாடுகளுடன் ஐரோப்பா ஒருங்கிணைந்து செயல்படுவதையுமே அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது.

 பல நூற்றாண்டுகளாக போரில் சிக்கித் தவித்த ஐரோப்பாவை, அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் ஒருங்கிணைந்து அமைதிப் பூங்காவாக மாற்றியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.