Show all

விஜய் சேதுபதியின் மாமனிதன்! இளையராஜா, கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா என மூவரின் இசையமைப்பில்; விரைவில் திரைக்கு

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-காயத்ரி நடிப்பில் உருவாகி வந்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் 'மாமனிதன்'. இதில் விஜய் சேதுபதி தானி ஓட்டுநராக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு கதைத்தலைவியாக காயத்ரி நடிக்கிறார். 

தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் நடந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குரல்பதிவு வேலைகள் விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இசைஞானியின் இசையை கேட்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,061.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.