Show all

தரகு வாங்குவதுதான் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலையா! போட்டு உடைத்த கருணாஸ்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் கஜா புயலால் முகாம்களில் அகதிகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. ஆகையால் எனது நண்பர் சார்பில் லண்டனில் இருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தமிழக அரசு நடுவண் அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது. கேரளாவுக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதி என்று மோடி செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தமிழகத்தை நடுவண் அரசு வஞ்சித்து வருகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசனை செய்து வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சட்டமன்றஉறுப்பினராகப் பதவி ஏற்றேன். ஆனால் அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. தரகு வாங்குவதுதான் சட்டமன்ற உறுப்பினர் வேலை, என்ற விதி தமிழகத்தில் உள்ளதால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.