Show all

விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி! அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி. இந்தப் படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். 

இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற மின்மினிகளும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்காக இதுவரை, அய்யா என்ற பாடலும், படத்தின் விளம்பரக் காணொளியும்  வெளியாகி விசிறிகளைக் கவர்ந்துள்ளது. விசிறிகளிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான, அவன் பாடலின் பாடல் வரிகள் கொண்ட காணொளி வெளியானது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.  

அய்யா பாடலை இயக்குனர் தியாகராஜா குமாரராஜன் இனிய தமிழில் எழுதியது போலவே, இந்த 2வது பாடலான  'அவன்' பாடலும் நல்ல தமிழில் அமைந்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களிலுள்ள பாடல்களில் தமிழ் செய்யுள் நடை என்பது அரிதாகிவிட்ட நிலையில், சீதக்காதி படத்தில் வெளியான இரண்டு பாடல்களிலும் தமிழுக்கு முதன்மைத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

மேலும் இந்த படத்தில் 75 அகவையுடைய நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதால் நாடக மேடை பின்னணியை மக்களுக்கு எளிதில் உணரவைக்க இது போன்று பாடல்களை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,987.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.