Show all

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளும் வாணிபோஜன்!

தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெளியீடு ஆகாத நிலையில் கூட வாணிபோஜனுக்கு பட வாய்ப்பு குவிவதை கண்டு தமிழ் திரையுலகம் வியப்பில் ஆழ்ந்து உள்ளது.

இவர் தெலுங்கு திரையில் விஜய் தேவரகொண்டா தயாரித்த முதல் படத்தில் கதைத்தலைவியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் லாக்கப் என்ற படத்திலும், ஓ மை கடவுளே என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

மேலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, தனக்கு நிறைய படவாய்ப்புகள் வருவதாகும், மேலும் தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே ஒப்புக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் ஓய்வு எடுக்க ஏற்ற வகையிலும் படங்களை ஒப்புக் கொள்வதாக கூறியுள்ளார். வாணி போஜன் முன்னணி நடிகையாக வலம் வருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,358.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.