Show all

அமைதிக்கு பெயர்தான் விஜய் என்று பாராட்டும் வரலட்சுமி

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சண்டக்கோழி.2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு பெயர்தான் விஜய் என்று விஜய்யை பாராட்டியிருக்கிறார்.  

சண்டக்கோழி2 வில் அதிரடி வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு அடுத்து விஜய்யுடன் நடிக்கும் சர்கார் படம் வெளியாக இருக்கிறது. விஜய் பற்றி அவர் அளித்த பேட்டியில், அமைதிக்கு மறுபெயர் விஜய். நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். மாறாக, சர்கார் ஒலிநாடா வெளியீட்டின் போது அமைதியா இருந்தேன். நாம பேசுறது அங்கே இருக்கிற பெரிய ஆட்களுக்கெல்லாம் புரியணும்ங்கிறதுக்காக பொறுமையாக பேசினேன்.

விஜய் அவர்கள், என்னோட கதாபாத்திரத்துல வேறு யாரும் இவ்வளவு திறம்பட நடிச்சிருக்க முடியாதுன்னு மேடையில சொன்ன பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது என்று மகிழ்ந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,947.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.