Show all

அனைத்து விதத்திலும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் நடுவண் அரசு.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

இந்தியா- இலங்கை ராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. தமிழர்களுக்கு நாளை துக்கமான கறுப்புநாள்.

ஏற்கனவே தமிழகச் சட்ட மன்றத்தில் சர்வதேச விசாரணை வேண்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு மதிக்காமல் குப்பையில் தூக்கி போட வேண்டிய நிலையில்தான் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

போர்க்குற்றம் நடந்து லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்ட நிலையில் தீர்மானத்தை கொண்டு வர இந்திய அரசு முயற்சிக்காமல்,

மாறாக அமெரிக்காவுக்கு ஆதரவாகவும்

தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது. எனவே நாளை எந்தவிதமான பலனும் கிடைக்காது.

அனைத்து விதத்திலும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் நடுவண் அரசு ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை மறுத்து வருகிறது.

சட்டத்துக்கு விரோதமாக கர்நாடக அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை முறையாக பெற்று தருவதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கையில் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதால் அது வெற்றி பெற்றால் தமிழ்நாட்டையும் தனியாக பிரித்து கேட்பார்கள் என்ற மனநிலையில் நடுவண் அரசு இருக்கிறது.

எனவே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தனி ஈழம் மட்டுமே தீர்வு. அதற்கு போராடும் அனைத்து அமைப்புகளும், இளைஞர்களும் இந்தக் கோரிக்கைகளை வலுப்படுத்த வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.