Show all

தொடர் இடிபாட்டில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி பொறுப்பேற்றது முதல் டெல்லி அரசுக்கும் நடுவண் அரசுக்கும் தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

இந்த அதிகாரப் போட்டியில், நடுவண் அரசின் பிரதிநிதியான டெல்லி ஆளுனர் நஜீப் ஜங்கிற்கு, நடுவண் அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 21 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் அமைச்சர்களின் சட்டபேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இதன் மூலம் அவர்களுக்கு கார் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லி சட்டபேரவை விதிகளின்படி சட்டமன்றஉறுப்பினர்களுக்கு இது போன்ற நியமனம் அளிக்கக் கூடாது. ஆதாயம் தரும் பதவி வகிக்கும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இது தெடார்பாக அறிக்கை துணை நிலை ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 21 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் மொத்தம் உள்ள 70 சட்டமன்றஉறுப்பினர்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 சட்டமன்றஉறுப்பினர்கள்; உள்ளதால் கெஜ்ரிவால் அரசுக்கு ஆபத்தில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.