Show all

புலி படத்தின் மீது வழக்கு.

தாகபூமி என்ற குறும்படம் கத்தி திரைப்படமாக எடுக்கப்பட்டதாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 5 பேர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான விசாரணை அக். 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. ராஜசேகர். இவர் தாகபூமி என்கிற தன்னுடைய குறும்படத்தை திரைப்படமாக வெளியிடக் காத்திருந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கத்தி என்ற பெயரில் அதை திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 22-ம் நாள் வழக்குத் தொடுத்தார்.

புதன்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கு விசாரணையை நீதிபதி டி.எஸ். நந்தகுமார் அக். 15-க்கு ஒத்தி வைத்தார்.

இதேபோல, புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜசேகர் மற்றொரு வழக்கும் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாசுக்கும், நடிகர் விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த விசாரணையும் அக். 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.