Show all

நடிகர் சங்கத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே தனது ஆதரவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை விஜயகாந்த் அளித்த பேட்டி:

அதிமுக ஆட்சியின் செயல்பாடு மோசமாக உள்ளது. நகரத்தின் பிரதான சாலைகள்கூட மோசமாக இருந்தால், கிராமப்புறச் சாலைகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவும், அதிமுகவும் பிற கட்சிகளை வளரவிடாமல் தடுக்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால், அதையெல்லாம் சமாளித்துத்தான் செல்ல வேண்டும்.

நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு யாருக்கு என்று சொல்வது சரியாக இருக்காது. வாக்களிப்பது ரகசியம் ஆகும்.

எனினும், நடிகர் சங்க நலனில் எனக்கு அக்கறை இருக்கிறது. அதனால், நல்லவர்கள் ஜெயிக்க வேண்டும். நல்லவர்களுக்கு என் ஆதரவு உண்டு என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.