Show all

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடி.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப் போல, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மாறினாலும், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என குறை கூறியுள்ளார்.

அங்கு பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 6 தவணை அகவிலைப்படி வழங்கப்படவில்லை என்றும், கடந்த 3 வருடங்களாக யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி நிரவல் மூலம் பல்கலைகழக பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.