Show all

திருமுருகன் காந்தி வெளியிட்டார்! சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் முதல் பார்வை சுவரொட்டி

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார். 

இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'தீர்ப்புகள் விற்கப்படும்'. இந்தப் படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். 

இந்தப் படம் பற்றி இயக்குனர் தீரன் கூறுகையில், 'இந்தப் படம் உண்மையான சம்பவங்களை அப்படியே தோலுறித்து காட்டியுள்ளது. சமூக விசயங்களை உள்ளடக்கிய தரமான பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது. 

மேலும் இது அதிரடிகள் நிறைந்த படமாகும். இந்தப் படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். படத்தின் கதைத்தலைவன் சத்யராஜ், சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன்' என்கிறார் இயக்குநர் தீரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.