Show all

(அவ்வப்போது எதையாவது பேசி மாட்டிக் கொள்வேன் அவ்வளவுதான்) பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சி-போட்டி கிடையாது: ரஜினி

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் பாராளுமன்றத்; தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படத்தையோ, மன்றத்தின் கொடியையோ, எந்த கட்சிக்கும் ஆதரவாக கருத்துப் பரப்புதல் செய்வதற்காக பயன்படுத்தக்கூடாது. 

தமிழகத்தின் தலையாய பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் நடுவணரசில் வலுவான ஆட்சி அமைந்து யார் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல், வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். 12 மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.