Show all

கதாபாத்திரம் குறித்து கணவர் அதிர்ச்சி அடைந்தாராம்! அதை இப்போது சொல்ல மாட்டாராம்; நடிகை: சமந்தா, படம்: சூப்பர் டீலக்ஸ்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி திருநங்கை சில்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். 

இப்படத்தில் நடித்தது பற்றி சமந்தா கூறியதாவது: சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டு முன்னணி நடிகைகள் சிலரிடம் இயக்குனர் அணுகியிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் இயக்குனர் கேட்ட போது நடிக்க ஒப்புக்கொண்டேன்.

எனது கதாபாத்திரம்பற்றி என் கணவர் நாக சைதன்யாவிடம் சொன்னபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அந்த வேடத்தில் நான் நடிக்க உள்ளதை அவரிடம் தெரிவித்துவிட்டேன். பட வெளியீட்டுக்குப் பிறகு என்னென்ன கருத்துக்;கள் வருமோ என்று எனக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு மிகவும் அதிகம்.

ரம்யாகிருஷ்ணன் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை என்ன என்பதை விளம்பரத்தை பார்த்து யாரும் யூகிக்க முடியாது. 

அரசியலில் ஈடுபடுவீர்களா என்கிறார்கள். அந்த எண்ணம் எனக்கு இல்லை. நடிப்பில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது விளையாட்டு துறையை சேர்ந்தவரின் குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்க ஆசை. மேற்கத்திய படங்களில் படங்களில் வருவதுபோல் அசாத்திய பெண் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது என்கிறார் சமந்தா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.