Show all

கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1989ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைய உள்ளார் கமல். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராக உள்ளது.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மௌலியின் படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.